டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ்..!
டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
தேசிய தலைநகர் டெல்லியில் ஏறக்குறைய 10 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், இலவச பஸ் பாஸ் திட்டத்தை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா கூறும்போது, கட்டுமான தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் பயணத்திற்காக ரூ. 1000 முதல் 3000 வரை செலவழிக்கின்றனர். எனவே, கட்டுமான தொழிலாளர்களுக்கு பேருந்து பயணத்தை இலவசமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொத்தனார், பெயிண்டர், வெல்டர், கார்பெண்டர், எலக்ட்ரீஷியன், காவலாளி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு அதிகபட்ச உதவி வழங்கப்பட வேண்டும் என்பது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முயற்சி.
டெல்லியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. வெல்டர்கள் கொத்தனார்கள், தச்சர்கள், எலக்ட்ரீசியன்கள், காவலர்கள் மற்றும் கட்டுமான தளத்தில் பணிபுரியும் பிற தொழிலாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொழிலாளர்களுக்கு அதிகபட்ச உதவி வழங்கப்பட வேண்டும் என்பது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முயற்சி. டெல்லியை உருவாக்கியவர் அவர் என்று கூறியுள்ளார்.
இந்த இலவச திட்டங்களால் டெல்லியின் மற்ற வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படாதா என்று அவரிடம் கேட்டபோது, அரசு நேர்மையாக இருந்தால் நலத் திட்டங்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது என்று பதிலளித்தார். மேலும் அவர், தலைவர்கள் அனைத்தையும் இலவசமாகப் பெற வேண்டும், தொழிலாளர்கள் எதுவும் இலவசமாகப் பெறக்கூடாது என்ற அரசியலை ஆம் ஆத்மி ஒருபோதும் செய்யாது என்று கூறினார். டெல்லியில் ஏற்கெனவே பெண்களுக்கு இலவச பேருந்து பயணவசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story