அரியானாவில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 4 பேர் கைது
அரியானாவில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சண்டிகார்,
அரியானாவின் பஸ்தாரா என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அங்கு வந்த சொகுசு கார் ஒன்றை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தியதில், காரில் பயங்கர வெடிபொருட்கள் இருந்தன. அதிக அளவில் வெடி மருந்துகள், வெடி பொருட்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காரில் இருந்த 4 பேரையும் கைது செய்தனர். கைதான நான்குபேரும் பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்திருந்த பயங்கரவாதிகள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குர்பிரித் உள்ளிட்ட நான்கு பேரும் நாடு முழுவதும் வெடிபொருட்களை விநியோகம் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்புடன் இந்த நான்கு பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story