சத்திஸ்கர்: திடீரென வெடித்த ஜேசிபி டயர்.! தூக்கியெறியப்பட்ட இருவர் பலி
சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜேசிபி இயந்திரத்தின் டயர் வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர்.
சத்திஸ்கர்,
சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வாகன பட்டறை ஒன்றில் ஜேசிபி எந்திரத்தின் டயரில் ஊழியர்கள் இருவர் காற்று நிரப்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இருவரும் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஜேசிபி இயந்திரத்தின் டயர் சேதமடைந்து இருந்ததால், வெடித்ததா, அல்லது அதிக அளவில் காற்று நிரப்பியதால், வெடித்ததா என்பது குறித்தும், வாகன பட்டறை உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டயர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் இதுவரை கேள்விப்படாத ஒன்று என்றும், மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story