குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் ஜெயில்: 5 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் கோர்ட்டு உத்தரவு
5 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆமதாபாத்,
குஜராத் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம், குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் மெசானாவில் இருந்து தானேரா பகுதிவரை பேரணி நடத்தினார்.
அவர் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் அவரது ராஷ்டிரீய தலித் அதிகார் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த 9 பேர் மீது சட்டவிரோதமாக கூடியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை மெசானாவில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டு விசாரித்து வந்தது. ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 பேரும் குற்றவாளிகள் என்று மாஜிஸ்திரேட் பார்மர் நேற்று தீர்ப்பு அளித்தார். 10 பேருக்கும் தலா 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story