இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு...!


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 6 May 2022 1:23 PM IST (Updated: 6 May 2022 1:23 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 ஆயிரத்து 275 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 3 ஆயிரத்து 205-ஐ விட அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 94 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 549 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 51 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆயிரத்து 688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது. 

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 189 கோடியே 81 லட்சத்து 52 ஆயிரத்து 695 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story