சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக 14-ந்தேதி நடை திறப்பு


சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக 14-ந்தேதி நடை திறப்பு
x
தினத்தந்தி 6 May 2022 3:43 PM IST (Updated: 6 May 2022 3:43 PM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இது தவிர ஒவ்வொரு தமிழ்மாத முதல் நாளிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.

14-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மறுநாள் 15-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் 19-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story