மராட்டியம்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 May 2022 6:48 PM IST (Updated: 6 May 2022 6:48 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்தனர்.

மும்பை,

மராட்டியத்தில் உள்ள அகமத்நகர் மாவட்டத்தில் ஆட்டோ மீது கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

மும்பையில் இருந்து சுமார் 240 கிமீ தொலைவில் உள்ள கோபர்கான் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசூத்பூர் ஃபாட்டா அருகே காலை 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story