டெல்லியில் மாவட்டம் தோறும் மாதிரி பூங்காக்கள் - சுற்றுசூழல் மந்திரி கோபால் ராய் அறிவிப்பு


டெல்லியில் மாவட்டம் தோறும் மாதிரி பூங்காக்கள் - சுற்றுசூழல் மந்திரி கோபால் ராய் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2022 10:22 PM IST (Updated: 6 May 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மாவட்டம் தோறும் மாதிரி பூங்காக்கள் அமைக்கப்படும் என டெல்லி சுற்றுசூழல் மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்றுமாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு மாவட்டங்கள் தோறும் பூங்காக்களை மறுவடிவமைப்பு செய்வது குறித்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டெல்லியில் உள்ள சுமார் 16,828 பூங்காக்களை மறுவடிவமைப்பு செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் கோபால் ராய், டெல்லியின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பூங்கா முன் மாதிரி பூங்காவாக மாற்றப்படும். 

மேலும் பல பூங்காக்கள் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்றும் கூறினார். இவ்வாறு உருவாக்கப்படும் முன்மாதிரி பூங்காக்களில் நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி ஜிம்கள், நீரூற்றுக்கள் மற்றும் வைஃபை வசதிகள் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story