கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என வினவினாரா ராகுல் காந்தி ?.. மீண்டும் விமர்சிக்கும் பாஜக


கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என வினவினாரா ராகுல் காந்தி ?.. மீண்டும் விமர்சிக்கும் பாஜக
x
தினத்தந்தி 7 May 2022 2:53 PM IST (Updated: 7 May 2022 2:53 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை குறிவைத்து மேலும் ஒரு வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

தெலங்கானாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ராகுல் காந்தி, கூட்டம் தொடங்கும் முன்பாக மாநில காங்கிரஸ் தலைவர்களிடம்  ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பொதுக் கூட்டத்தில் நான் என்ன பேசவேண்டும்? என்ன விவகாரங்கள் தொடர்பாக இந்தப் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறித்து கேட்டறிந்து கொண்டிருந்தார்.

இதனை பகிர்ந்திருக்கும் அமித் மால்வியா, நேற்று ராகுல் காந்தி, தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு முன்பு, தனது கட்சியினரிடம் கூட்டத்தில் என்ன பேச வேண்டும், எது தொடர்பாக பொதுக் கூட்டம் என்று கேட்டறிந்தார். தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம், இரவு கேளிக்கை விருந்துகளுக்கு இடையே அரசியலில் ஈடுபட்டால் இப்படித்தான் நடக்கும்” என சாடியுள்ளார். 


Next Story