ஜோத்பூரில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு


ஜோத்பூரில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 7 May 2022 3:39 PM IST (Updated: 7 May 2022 3:39 PM IST)
t-max-icont-min-icon

ஜோத்பூரில் நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகைக்கு முதல் நாள், இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக 211 பேரை கைது செய்த போலீசார், 10 காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று வரை அமலில் இருந்த ஊரடங்கு, நாளைய தினம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது மருந்தகங்கள், வங்கி சேவைகள், அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story