கடுமையான பணவீக்கத்தால் திண்டாடும் மக்கள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்


கடுமையான பணவீக்கத்தால் திண்டாடும் மக்கள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
x
தினத்தந்தி 7 May 2022 6:33 PM IST (Updated: 7 May 2022 6:33 PM IST)
t-max-icont-min-icon

கடுமையான பணவீக்கம், வேலை வாய்ப்பு இன்மை, மோசமான ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றால் சாமானிய மக்கள் திண்டாடுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

 வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு சிலிண்டர் விலை 1015 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்  வயநாடு தொகுதி எம்.பியுமான  ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.414 ஆக இருந்தது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ.827 மானியமாக வழங்கப்பட்டது. இன்று 999 ரூபாயாக உள்ளது. மானியமோ பூஜ்ஜியம்.

சாமானிய மக்களின் பாதுகாப்பிற்காக காங்கிரஸ் போட்டிருந்த அனைத்து பாதுகாப்பு வலைகளையும் நரேந்திர மோடி அரசு அகற்றிவிட்டது. இன்று கடுமையான பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான நிர்வாகத்திற்கு எதிராக ஆகியவற்றிற்கு எதிராக கோடிக்கணக்கான இந்திய குடும்பங்கள் போராடி வருகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.

Next Story