காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை


காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை
x
தினத்தந்தி 8 May 2022 8:51 AM GMT (Updated: 2022-05-08T14:21:52+05:30)

காஷ்மீர் என்கவுண்ட்டரில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி உள்பட 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

குல்காம்,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சியான் தேவ்சர் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை தொடங்கியது.

ஏறக்குறைய 6 மணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்த இந்த சண்டையில் குல்காமில் தேவ்சர் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களில் ஒருவர் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க உறுப்பினர்.  அந்த பயங்கரவாதியின் பெயர் ஐதர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்றொரு பயங்கரவாதி உள்ளூரை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

வடகாஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஐதர் செயல்பட்டு வந்ததுடன், பல்வேறு பயங்கரவாத குற்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

இதனை காஷ்மீர் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றையும் படையினர் கைப்பற்றி உள்ளனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


Next Story