அசானி புயலால் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 8 May 2022 4:30 PM IST (Updated: 8 May 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

அசானி புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க ஆகிய 3 மாநிலங்களில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் அசானி புயல்  அடுத்த 24 மணி நேரத்தில் இந்தப் புயல் மேலும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தப் புயல் ஒடிசா, ஆந்திராவில் கரையைக் கடக்காது என்றும் மாறாக கடற்கரையை ஒட்டியே நகர்ந்து சென்று வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அசானி புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க ஆகிய 3 மாநிலங்களில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்குவங்கத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவில் செவ்வாய், புதன்கிழமைகளில் கனமழை பெய்யும். என்று கணிக்கப்பட்டுள்ளது.

 ஒடிசாவின் கஜ்பதி, கஞ்சம், புரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன் கிழமையில் மிக ஒடிசாவின் 5 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story