மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் அயோத்தியில் புதிய சாலை அமைக்கப்படும் - யோகி ஆதித்யநாத்

லதா மங்கேஷ்கரின் நினைவாக அயோத்தியில் புதிய குறுக்கு சாலை அமைக்கப்பட உள்ளது.
லக்னோ,
பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் அயோத்தியில் புதிய குறுக்கு சாலை உருவாக்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம், 92-வது வயதில் உயிரிழந்தார். லதா மங்கேஷ்கரின் நினைவாக அயோத்தியில் புதிய குறுக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. அவரது நினைவைப் போற்றும் வகையில் புதிய குறுக்கு சாலைக்கு அவரது பெயரிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுமானத்திற்கான உத்தரவை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது அயோத்தி ஆய்வுக் கூட்டத்தில் அறிவித்தார்.15 நாட்களுக்குள் இதற்கான முன்மொழிவை அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு அயோத்தி நகராட்சி கார்ப்பரேஷனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story