மக்கள்தொகை கணக்கெடுப்பு 100 சதவீதம் துல்லியமாக இருக்கும் - அமித்ஷா தகவல்
கொரோனா காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் அமிங்கான் நகரில், மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரக அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கொரோனா காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பது முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு திட்டமிடுவதற்கு துல்லியமான கணக்கெடுப்பு அவசியம்.
இந்த மக்கள்ெதாகை கணக்கெடுப்பு பணி, மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும். எனவே, 100 சதவீதம் துல்லியமாக இருக்கும். அதன் அடிப்படையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story