“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம்


“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” - இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 10 May 2022 7:53 AM IST (Updated: 10 May 2022 7:53 AM IST)
t-max-icont-min-icon

தீவிர புயலாக இருக்கும் அசானி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது.

அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியில் இருந்து 590 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள அசானி புயல் இன்று இரவு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது தீவிர புயலாக இருக்கும் அசானி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story