நாடு முழுவதும் மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - உள்துறை அமைச்சர் அமித்ஷா


நாடு முழுவதும் மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
தினத்தந்தி 10 May 2022 2:57 PM IST (Updated: 10 May 2022 2:57 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 2024-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பிறப்பும் இறப்பும் தானாகவே மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார்.

கவுகாத்தி, 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்றாா். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவா் நாடு முழுவதும் மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டம் இருப்பதாக கூறினாா்.  

 மேலும் வருகிற 2024-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பிறப்பும் இறப்பும் தானாகவே மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் வகையில் மக்கள் தொகை பதிவேடு நவீனமயமாக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாக்க மேலும் நவீனமயப்படுத்தப்படும்” என்றார். 

Next Story