சென்னை ஐகோர்ட்டில் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல்


சென்னை ஐகோர்ட்டில் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல்
x
தினத்தந்தி 11 May 2022 12:40 AM IST (Updated: 11 May 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டில் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி, 

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள கோவிந்தராஜுலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமார குரூப், முரளி சங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராம்ராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

மேலும் கூடுதல் நீதிபதியாக உள்ள ஏ.ஏ.நக்கீரனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

Next Story