பேரறிவாளன் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது!
பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் தொடங்கியது.
புதுடெல்லி,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் தொடங்கியது.
பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மேலும் சில வாதங்களை முன்வைக்க விரும்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கவர்னர் எடுத்த முடிவு தொடர்பான ஆவணத்தின் நகலை சமர்பித்தது.
இந்த விவகாரத்தில் 2 அல்லது 3 ஆண்டுகள் கவர்னர் முடிவெடுக்கவில்லை. நாங்கள் முடிவெடுக்க முடிவுசெய்தபோது , ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என கூறப்பட்டது.அமைச்சரவை முடிவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப அதிகாரம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே எம் நட்ராஜ் ஆஜர் ஆகியுள்ளார்.இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story