17 வது மாடியில் இருந்து விழுந்த பெண் மரணம்..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 11 May 2022 5:18 PM IST (Updated: 11 May 2022 5:18 PM IST)
t-max-icont-min-icon

உத்தரப்பிரதேசத்தில் 17 வது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழந்தார்.

காசியாபாத்,

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லேண்ட் கிராப்ட் சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 17வது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழந்தார்.

முன்னதாக ரஞ்சனா சாஹ்னி (வயது 50) என்ற பெண் தன்னுடைய குடும்பத்துடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக அந்த பெண் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அந்த பெண் 17 வது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என கவிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story