இந்திய ரெயில்வேயின் நிலக்கரி போக்குவரத்துக்கான மாதாந்திர இலக்கு கடந்த ஒரு வருடமாக எட்டப்படவில்லை என தகவல்
இந்திய ரெயில்வேயின் நிலக்கரி போக்குவரத்துக்கான மாதாந்திர இலக்கு கடந்த ஒரு வருடமாக எட்டப்படவில்லை என அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
புதுடெல்லி,
இந்தியாவில் 75 சதவீத மின் உற்பத்தி நிலக்கரியில் இருந்து செய்யப்படுகிறது. இந்திய ரெயில்வேயின் சரக்கு போக்குவரத்து வருவாயில், நிலக்கரி போக்குவரத்தின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் இந்திய ரெயில்வேயின் நிலக்கரி போக்குவரத்துக்கான மாதாந்திர இலக்கு கடந்த ஒரு வருடமாக எட்டப்படவில்லை என அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரம் மாதத்தில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 27.6 சதவீதம் அதிகரித்துள்ள நிலையிலும், அனல்மின் நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது. 2022 ஏப்ரலில் தினமும் 261 சரக்கு ரெயில்களை நிலக்கரி போக்குவரத்துக்காக இந்திய ரெயில்வே ஒதுக்கியது.
கடந்த 3 மாதங்களில் இது தான் குறைந்தபட்ச எண்ணிக்கை ஆகும். அதே சமயம் அனல்மின் நிலையங்கள் அல்லாத இதர துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரியின் அளவு 2021 ஏப்ரலை விட 2022 ஏப்ரலில் 21.3 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story