கோவாவில் ரஷிய சிறுமி கற்பழிப்பு: ஓட்டல் ஊழியர் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 May 2022 11:19 PM GMT (Updated: 2022-05-13T04:49:48+05:30)

கோவாவில் ரஷிய சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில், ஓட்டல் ஊழியர் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார்.

பனாஜி, 

ரஷியாவை சேர்ந்த 12 வயது சிறுமி, கோவாவின் அராம்பாலில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். அங்கு ரூம் பாயாக வேலை பார்த்த இளைஞர் ஒருவர், தான் வெளியில் சென்றிருந்த சமயத்தில், நீச்சல் குளத்தில் வைத்தும், பின்னர் அறைக்கு சென்றும் தனது மகளை கற்பழித்துவிட்டதாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து நடந்த விசாரணையில் கர்நாடகாவை சேர்ந்த ரவி லாமணி குற்றவாளி (வயது 28) என தெரியவந்தது. அவர் சொந்த ஊரான கர்நாடகாவிற்கு தப்பி சென்றுவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மறுநாளே கர்நாடக போலீசாரின் உதவியுடன் ரவி லாமணி கைது செய்யப்பட்டார்.

Next Story