உத்தரபிரதேசத்தில் அனைத்து மதரசாக்களிலும் தேசிய கீதம் கட்டாயம்..!!
உத்தரபிரதேசத்தில் அனைத்து மதரசாக்களிலும் தேசிய கீதம் கட்டாயம் என்று கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 16 ஆயிரத்து 461 மதரசாக்கள் எனப்படும் இஸ்லாமிய பள்ளிகள் உள்ளன. அவற்றில் 560 பள்ளிகள் அரசு மானியம் பெறுபவை. இந்தநிலையில், அனைத்து மதரசாக்களிலும் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்று உத்தரபிரதேச மதரசா கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு நேற்று மதரசாக்கள் திறக்கப்பட்டன. நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, இறைவணக்கத்தின்போது ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயமாக தேசிய கீதம் பாட வேண்டும். இதை பின்பற்றுவதை மாவட்ட சிறுபான்மை நல அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story