தாஜ்மகாலில் பூட்டப்பட்ட ரகசிய அறைகளை திறக்ககோரிய மனு தள்ளுபடி


தாஜ்மகாலில் பூட்டப்பட்ட ரகசிய அறைகளை திறக்ககோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 13 May 2022 4:30 AM GMT (Updated: 13 May 2022 5:10 AM GMT)

தாஜ்மஹாலில் மூடப்பட்ட 22 அறைகளை திறக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அலகாபாத்,

தாஜ்மகாலில் மூடப்பட்ட   22 அறைகளின் கதவுகளைத் திறக்கத் தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ரஜனீஸ் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தாஜ்மகால் கட்டிடம் ஒரு சிவன்கோவில் என்றும், அது பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும் ரகசிய அறைகளில் இந்து கடவுள் இருப்பதாக கூறி வழக்கு தொடுத்த ரஜ்னீஷ் சிங்கிற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Next Story