காஷ்மீரில் இளைஞர் படு கொலை - நீதி கேட்டு டார்ச் லைட் அடித்து விடிய விடிய போராட்டம்


காஷ்மீரில் இளைஞர் படு கொலை - நீதி கேட்டு டார்ச் லைட் அடித்து விடிய விடிய  போராட்டம்
x
தினத்தந்தி 13 May 2022 12:02 PM IST (Updated: 13 May 2022 12:02 PM IST)
t-max-icont-min-icon

அரசு அலுவலகத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள், காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் நீதி கேட்டு அச்சமூகத்தினர் விடியவிடிய போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த 36 வயது நபர் நேற்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த தகவல் அறிந்த பண்டிட்கள், இங்கு பண்டிட் மக்ககளுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி இரவு முழுவதும் அவா்கள் போராட்டத்தில் குதித்தனர். பல பகுதிகளில் மக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டு மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

கடந்த 1990 ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்கு பிறகு அவா்கள் மறுவாழ்வு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனா். தங்கள் முகாம்களில் இருந்து வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். தங்களை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டதாக அவா்கள் குற்றம்சாட்டினர்.பிரதமா் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினா்.

மேலும், காஷ்மீாின் பல பகுதிகளில் பண்டிட்கள் சமூகத்தை சோ்ந்தவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணியை நடத்தினா்.

காஷ்மீா் மாநிலத்தில் கடந்த அக்டோபா் மாதத்தில் இருந்து  பண்டிட்கள் தாக்கப்படுவது அதிகாித்து வருகின்றன. இந்த தாக்குதலில் பலா் காயமடைந்து உள்ளனா். காஷ்மீா் பண்டிட் ஒருவா், சீக்கியா் ஒருவா் மற்றும் புலம்பெயா்ந்த இந்துக்கள்  என ஏழு போ் உயிாிழந்துள்ளனா்.

புத்காம் மாவட்டத்தின் சதுரா கிராமத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சுடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினா். இந்த சம்பவத்தில் அரசு அலுவலர் ராகுல் பட்  படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா். அவரது உடல் மருத்துவமனையில் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிாிழந்த ராகுல் பட், காஷ்மீா் பண்டிட் மறுவாழ்விற்கான சிறப்பு திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளாக அரசு அலுவலராக பணியாற்றி வந்துள்ளாா்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, ஷாக்புரா என்னும் பகுதியில் காஷ்மீா் பண்டிட் குடும்பங்கள் பலா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், மீண்டும் அங்கு நடைபெற்று வரும் கொலைகள் காஷ்மீா் பண்டிட்களின் மறுவாழ்விற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

காஷ்மீா் பண்டிட்களை மீண்டும் பள்ளதாக்கு பகுதிகளில் குடியமா்த்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் அவா்கள் மீது நடத்தப்படும் தொடா் தாக்குதல்கள் காரணமாக பள்ளதாக்கு பகுதிகளில் மீண்டும் குடியேறினால்  அவா்கள் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

அண்மையில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. இப்படம், 80-களின் பிற்பகுதியிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதைக் களமாக கொண்டு வெளியானது.

காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடியே நேரில் அழைத்து பாராட்டியது  குறிப்பிடத்தக்கது.

Next Story