புவனேஸ்வரில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ‘சென்சார் பூங்கா’ திறப்பு


புவனேஸ்வரில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ‘சென்சார் பூங்கா’ திறப்பு
x
தினத்தந்தி 14 May 2022 11:48 PM GMT (Updated: 14 May 2022 11:48 PM GMT)

சென்சார் பூங்காவில் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் மகிழ்ச்சியாக பொழுது போக்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் ‘சென்சார் பூங்கா’ திறக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இந்த சென்சார் பூங்காவில் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் மகிழ்ச்சியாக பொழுது போக்குவதற்கான வசதிகள் உள்ளதாக புவனேஸ்வர் மேயர் சுலோச்சனா தாஸ் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 37 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story