ரெயில்வேயில் நீக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்: ரெயில்வே மந்திரிக்கு கேரள எம்.பி கடிதம் மூலம் வலியுறுத்தல்!


ரெயில்வேயில் நீக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்: ரெயில்வே மந்திரிக்கு கேரள எம்.பி கடிதம் மூலம் வலியுறுத்தல்!
x
தினத்தந்தி 15 May 2022 6:14 PM IST (Updated: 15 May 2022 6:15 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயில் நீக்கப்பட்ட 72,000 பணியிடங்களை சேர்த்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேரள எம்.பி சிவதாசன் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே நிர்வாகம், கடந்த 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பல வேலைகளைச் செய்ய புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளதால், அவசியமில்லை என  72,000 பணியிடங்களை நீக்கியுள்ளது. அதில் குரூப்-சி மற்றும் குரூப்-டி பிரிவில் இருந்து 72,000 பணியிடங்களை மட்டும் நீக்கியுள்ளனர். 

இப்போது இந்த பணிகளை செய்து வரும் ஊழியர்களும் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவார்கள். ரயில்வே செயல்பாடுகள் நவீனமாகவும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாகவும் மாறியுள்ளது.

ரெயில்வே துறைக்கு வரும் வருவாயில், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் செலவாகிறது. அதற்கு முக்கிய காரணம் ரயில்வே துறையில் அதிக ஊழியர்கள் பணியாற்றுவதே என ரயில்வே நிர்வாகம் நினைக்கிறது.

இந்நிலையில்,  இந்திய ரயில்வேயில் நீக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு எம்.பி. சிவதாசன் கடிதம் எழுதியுள்ளார். 

கேரளாவைச் சேர்ந்த சிபிஐ(எம்) கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யான சிவதாசன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:-  

அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது. ஆகவே,  இந்திய ரயில்வேயில் நீக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் சேர்த்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று  சிவதாசன் கேட்டுக் கொண்டார்.

Next Story