உத்தரப்பிரதேசம்: கங்கை ஆற்றில் குளிக்கச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 15 May 2022 9:50 PM IST (Updated: 15 May 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றில் குளிக்கச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பதோஹி,

உத்தரபிரதேச மாநிலம் கோபிகஞ்ச் போலீஸ் வட்டத்தில் உள்ள பிரோஸ்பூர் கங்கா காட் என்ற இடத்தில், கவுலாப்பூர் பகுதியை சேர்ந்த 7 இளைஞர்கள் பதோஹி மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

7 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது, இளைஞர்கள் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண்கள் தங்களது சேலைகளை கொடுத்து மூன்று பேரை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் 4 பேர் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களது மேற்பார்வையில் மீட்புப் பணி நடைபெற்றது. தொடர்ந்து ஆற்றில் மூழ்கிய 4 பேரையும் சடலமாக மீட்டனர்.

இறந்தவர்களில் பிரபாத் மிஸ்ரா (24), அங்கித் குமார் சதூர்வேதி (19), பிரவேஷ் மிஸ்ரா (19) மற்றும் லக்கி மிஸ்ரா (15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story