கோதுமை கொள்முதல்; 6 மாநிலங்களில் கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு நடவடிக்கை


கோதுமை கொள்முதல்; 6 மாநிலங்களில் கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு நடவடிக்கை
x

6 மாநிலங்களில் கோதுமை கொள்முதலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக கோதுமை உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் கோதுமை கொள்முதலுக்கான கால அவகாசத்தையும் நீட்டித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

கோதுமை கொள்முதலுக்கான கால அவகாசம் இந்த மாத தொடக்கத்துடன் முடிவடைந்த நிலையில், தற்போது வருகிற 31-ந்தேதி வரை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, கடந்த 10-ந்தேதியுடன் நிறைவடைந்த ராஜஸ்தானுக்கும், நேற்றுடன் முடிவடைந்த உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்துக்கும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த தகவலை மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கோதுைம உற்பத்தி செய்யப்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வருகிற 31-ந்தேதி வரை கோதுமையை கொள்முதல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story