இமாச்சல்- கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 3 பேர் காயம், 4 பேர் உயிரிழப்பு!
இமாச்சலப்பிரதேசத்தில் கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர்.
சிம்லா,
இமாச்சலப்பிரதேசத்தில் குளு மாவட்டத்தில் கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் சுற்றுலாப்பயணிகள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பஞ்சார்-ஜலோரி-ஜோட் சாலையில் கியாகி பகுதிக்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான கார் டெல்லி பதிவு எண்ணை கொண்டுள்ளது என்று கூறிய போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story