தெலுங்கானாவில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...!


தெலுங்கானாவில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...!
x
தினத்தந்தி 16 May 2022 5:29 PM GMT (Updated: 2022-05-16T22:59:46+05:30)

தெலுங்கானாவில் கொரோனா தாக்குதலுக்கு இன்று உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, தெலுங்கானாவில் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 92 ஆயிரத்து 627 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 62 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தெலுங்கானாவில் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேவேளை, கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் தெலுங்கானாவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 111 என்ற அளவில் உள்ளது.

Next Story