கர்நாடகாவின் பெங்களூருவில் தொடர் மழை; வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து உள்ளது.
பெங்களூரு,
வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறு, குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு 20 மாவட்டங்களில் 1.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசங்களிலும் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், அசானி புயல் ஆந்திர பிரதேச பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கரையை கடந்தது.
இதனால், கரையோர பகுதிகளில் மழை பொழிவு ஏற்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இன்று தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வாகனங்களில் செல்வோர், தெளிவற்ற வானிலையால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். தொடர் மழையால் பெங்களூருவில் வெப்பநிலை குறைந்து மக்களுக்கு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story