கேரளா: நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை...!
கொல்லம் அருகே தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
பாலக்காடு,
கேரள மாநிலம்,கொல்லம் மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவருக்கு பத்மநாபபுரம் நகரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு வழக்கம் போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு ராமச்சந்திரனும் ஊழியர்களும் வீடு திரும்பினார்கள். இன்று காலை ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் இருவர் நிறுவனத்தை திறப்பதற்காக சென்றார்கள்.
திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த பூஜை அறையில் மதுபானம் மற்றும் வெத்தலை, பாக்கு, எலுமிச்சம்பழம் ஆகியவை வைத்து பூஜை செய்தது தெரிந்தது.
பின்னர், ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் இரண்டாவது மாடிக்கு சென்று பார்த்தார்கள். அங்கு மாடியின் ஒரு பகுதியிலுள்ள கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அங்கு 2 லாக்கர் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் பணமும், ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது .
அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் புனலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story