ஆந்திராவில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை..!
பலத்த சூறை காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால், அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன.
அமராவதி,
ஆந்திரா மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஒருசில பகுதிகள் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குப்பம் தொகுதியில் உள்ள குப்பம் சாந்திபுரம்,ராம்குப்பம், குடுபள்ளி ஆகிய மண்டலங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த சூறை காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால், அப்பகுதியில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் காற்றில் சாய்ந்துள்ளன.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Related Tags :
Next Story