இந்தியாவில் அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் ஆண்கள் - புள்ளி விவரங்களில் தகவல்
இந்தியாவில் ஆண்கள் அதிக அளவில் அசைவ உணவுகளை விரும்பி உண்பது தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு, 2019-21 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அசைவ உணவு உண்பவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. முன்னதாக 2015-16 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டு, தற்போதைய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 83.4 சதவீத ஆண்களும், 70.6 சதவீத பெண்களும் தினமும் அசைவ உணவு சாப்பிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் 2015-16 ஆம் ஆண்டில் 78.4 சதவீத ஆண்களும், 70 சதவீத பெண்களும் மட்டுமே அசைவ உணவை சாப்பிட்டு வந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள பிரிவில், அசைவ உணவே சாப்பிடாமல் இருந்த ஆண்களில் தற்போது 16.6 சதவீதம் பேர் மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை சாப்பிடுவதும் தெரிய வந்ந்துள்ளது. அதைப் போல 15 முதல் 49 வயது வரை உள்ள பிரிவில் அசைவ உணவே சாப்பிடாத பெண்களில் தற்போது 29.4 சதவீதம் பேர் மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை உண்பது தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story