இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்ட பனாமா நாட்டு காதல் ஜோடி
உத்தரகாண்டில் பனாமா நாட்டு காதல் ஜோடி இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
டேராடூன்,
வட, தென் அமெரிக்காவை இணைக்கும் நாடுகளில் பனாமா குடியரசும் ஒன்று. பனாமா நாடு கரீபியன் மற்றும் பசுபிக் கடல் பகுதியை எல்லைகளாக கொண்டுள்ளது.
இதற்கிடையில் பனாமா குடியரசு நாட்டை சேர்ந்த காதல் ஜோடி ஜொஷி ஹொன்சலன் மற்றும் ஃபிலிசாபெத். இவர்கள் இந்தியா மீதும் இந்து மதம் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். குறிப்பாக, உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரியில் உள்ள கங்கோத்ரி தோஹம் கோவில் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், ஜொஷி ஹென்சலன் மற்றும் ஃபில்சாபெத் நேற்று கங்கோத்ரி கோவிலில் திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடியின் திருமணம் இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இதனை தொடர்ந்து தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story