முன்னாள் பிரதமா் தேவகவுடா பிறந்தநாள் - பிரதமா் மோடி வாழ்த்து


முன்னாள் பிரதமா் தேவகவுடா பிறந்தநாள் - பிரதமா் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 18 May 2022 1:17 PM IST (Updated: 18 May 2022 1:17 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமா் தேவகவுடா பிறந்தநாளையொட்டி பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மதசாா்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா இன்று பிறந்த நாளாகும். இவருக்கு வயது 89. இவா் கா்நாடக மாநிலத்தின் முதல் - மந்திரியாகவும் இருந்துள்ளாா். இவா் கடந்த 1996-97 ஆகிய ஆண்டுகளில் சுமாா் 11 மாதங்கள் இந்திய பிரதமராக பதவி வகித்தாா்.

இவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தொிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டா் பதிவில்,

 “நமது முன்னாள் பிரதமரும், மதிப்பிற்குரிய அரசியல்வாதியுமான திரு. தேவகவுடா ஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தருவானாக என பதிவிட்டுள்ளார்.

Next Story