டெல்லி: ரோகிணி நீதிமன்றத்தில் தீ விபத்து


டெல்லி: ரோகிணி நீதிமன்றத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 18 May 2022 3:12 PM IST (Updated: 18 May 2022 3:12 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறைக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

டெல்லி தீயணைப்பு சேவையின் இயக்குனர் அதுல் கர்க் கூறுகையில்,

ரோகிணி நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள நீதிமன்ற அறை 210இல் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. நீதிபதிகள் அறைக்கு அருகில் உள்ள ஏசியில் தீப்பிடித்துள்ளதாக அவர் கூறினார்.

வடக்கு டெல்லி வழக்குரைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீதிமன்ற வளாகத்தில் அடிக்கடி இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், மனுதாரர்கள் உள்பட வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகள் நீதிமன்றங்களுக்கு செல்லும் அனைவருக்கும் ஒருவித அச்சம் ஏற்படுகிறது.

இந்த சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் கேள்விக்குறியாகி உள்ளது.

ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றமும் அதன் சொந்த பராமரிப்புக் குழுவைக் கொண்டுள்ளது. அனைத்து உபகரணங்களும் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்கும் பொறுப்பு தீயணைப்புத் துறைக்கு தான் உள்ளது.

நீதிமன்ற வளாகங்களில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள், நீதிமன்றங்களில் தீ பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அதை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் வினீத் ஜிண்டால் கூறினார்.

Next Story