விலைவாசி உயர்வு: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
தங்களின் அன்றாட செலவுகளுக்கு கூட கடன் வாங்க வேண்டியிருக்குமோ என நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அச்சப்படுகின்றனர் என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து இருப்பதாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி , மக்கள் தங்கள் அன்றாட செலவுகளை ஈடு செய்ய கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கிண்டலாக மத்திய அரசை சாடியுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், பாஜக அரசின் ஒரே ஒரு பொருளாதார கொள்கை கூட நடுத்த வர்க்கம், ஏழை எளிய மக்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் செலவினங்களை குறைக்கும் வகையிலும் இல்லை.
தங்களின் அன்றாட செலவுகளுக்கு கூட கடன் வாங்க வேண்டியிருக்குமோ என நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அச்சப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். தனது பதிவோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடகசெய்தி ஒன்றையும் இணைத்து இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story