டெல்லி ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளன: பிரதமருக்கு இந்து மகா சபா கடிதம்


டெல்லி ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளன: பிரதமருக்கு இந்து மகா சபா கடிதம்
x
தினத்தந்தி 18 May 2022 7:44 PM IST (Updated: 18 May 2022 7:44 PM IST)
t-max-icont-min-icon

ஜாமா மசூதி வளாகத்தில் புதையுண்டுள்ள இந்து கடவுள் சிலைகளை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில்  உள்ள ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளதாகவும் அவற்றை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு இந்து மகா சபா கடிதம் எழுதியுள்ளது. 

இது குறித்து இந்து மகா சபாவின் தலைவர் சுவாமி சக்ரபாணி  எழுதிய கடிதத்தில், ' டெல்லி ஜமா மசூதி முன்பாக  உள்ள பெரிய தரைக்கு அடியில் இந்து கடவுள்களின் சிலைகள் புதையுண்டுள்ளன. மசூதியின் படிகளுக்கு அடியிலும் இந்து கடவுள்களின் சிலைகள் புதைக்கப்பட்டுள்ளன. எனவே,  ஜாமா மசூதி வளாகத்தில் புதையுண்டுள்ள இந்து கடவுள் சிலைகளை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரலாற்று சிறப்பு வாய்ந்த டெல்லி ஜாமா மஸ்ஜித்,  முகாலய பேரரசால் 1644-1656 கால கட்டத்தில் கட்டப்பட்டது.  பழம்பெருமை வாய்ந்த இது, நாட்டின் பெரிய மசூதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. 


Next Story