4 பள்ளி பஸ்கள், கார், ஆட்டோ அடுத்தடுத்து மோதி விபத்து - மாணவ, மாணவிகள் உள்பட 26 பேர் படுகாயம்


4 பள்ளி பஸ்கள், கார், ஆட்டோ அடுத்தடுத்து மோதி விபத்து - மாணவ, மாணவிகள் உள்பட 26 பேர் படுகாயம்
x

மேம்பாலத்தில் பள்ளி பஸ்கள், கார், ஆட்டோ அடுத்தடுத்து மோதிய விபத்தில் மாணவ, மாணவிகள் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் எம்.ஜி. சாலையில் சலிம்ஹர் மேம்பாலத்தில் இன்று மதியம் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, பயங்கர விபத்து ஏற்பட்டது. சாலையில் சென்றுகொண்டிருந்த 4 பள்ளி பஸ்கள், கார், ஆட்டோ ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் பள்ளி பஸ்சில் இருந்த 24 மாணவ, மாணவிகள் உள்பட 28 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story