புதுச்சேரியில் வரும் 26-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.!


புதுச்சேரியில் வரும் 26-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.!
x

புதுச்சேரியில் வருகிற 26-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் வருகிற 26-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி இளநிலை எழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறையை ஈடுசெய்வதற்காக ஏற்கெனவே 26-ந்தேதி பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story