பெங்களூருவில் 29-ந்தேதி பிரதமர் மோடி தெருமுனை பிரசாரம்


பெங்களூருவில் 29-ந்தேதி பிரதமர் மோடி தெருமுனை பிரசாரம்
x

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி இன்னும் தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை. அவரது பிரசாரத்தை எதிர்பார்த்து பா.ஜனதா வேட்பாளர்களும், தொண்டர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 29-ந்தேதி தேர்தல் பிரசாரத்திற்காக பெங்களூருவுக்கு வர இருப்பதாகவும், அவர் பிரமாண்ட ரோடுஷோ (தெருமுனை பிரசாரம்) நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அன்று காலை பெங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள நைஸ் ேராடு சந்திப்பில் இருந்து சுங்கதகட்டே வரை திறந்த காரில் ஊர்வலமாக சென்று மக்களிடம் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அன்று இரவு பெங்களூருவில் தங்கும் பிரதமர் மோடி, மறுநாள் (30-ந்தேதி) கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, மைசூரு மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். பழைய மைசூரு பகுதிகளாான ராமநகர், மைசூரு மாவட்டங்களில் பா.ஜனதா கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி இந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story