அவசர உதவி எண் 112-ஐ தொடர்பு கொண்ட 20 நிமிடத்தில் நடவடிக்கை-பீதர் உள்பட 3 மாவட்டங்கள் முதல் இடம் பிடித்தது


அவசர உதவி எண் 112-ஐ தொடர்பு கொண்ட 20 நிமிடத்தில் நடவடிக்கை-பீதர் உள்பட 3 மாவட்டங்கள் முதல் இடம் பிடித்தது
x

112-ஐ தொடர்பு கொண்ட 20 நிமிடத்தில் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதில் கர்நாடகத்தில் பீதர் உள்பட 3 மாவட்டங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளது. நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதல் இடம் பிடித்துள்ளது.

பீதர்: 112-ஐ தொடர்பு கொண்ட 20 நிமிடத்தில் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதில் கர்நாடகத்தில் பீதர் உள்பட 3 மாவட்டங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளது. நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதல் இடம் பிடித்துள்ளது.

அவசர உதவி எண்

கர்நாடகத்தில் போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கான எண் '100', அவசர உதவி எண் '108' ஆகியவை ரத்து செய்யப்பட்டு அவற்றுக்கு ஒரே எண்ணாக '112' அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கும் குற்றச்சம்பவங்கள் நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த உதவி எண் அமல்படுத்தபட்ட நாள் முதல் இன்று வரை கர்நாடகத்தில் எந்த மாவட்டங்களில் அதிகளவு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். எவ்வளவு நேரத்திற்குள் சென்று போலீசார் நடவடிக்கை எடுத்தனர் என்பது குறித்த தகவல்களை போலீசாா் ஆய்வு செய்து வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் எடுக்கப்பட்ட ஆய்வில் கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்த 112 உதவி மைய ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

நகரங்களில்...

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 112 உதவி எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்ட 18 நிமிடம் 20 நொடிகளில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ராய்ச்சூர், பீதர் மாவட்டங்களில் 20 நிமிடங்களுக்குள் போலீசாரும், உதவி மைய ஊழியர்களும் குற்றச்செயல்களை தடுத்துள்ளனர்.

நகரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெங்களூரு நகரம் முதல் இடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.


Next Story