உத்தரபிரதேசம்: டேங்கர் லாரி மீது ஜீப் மோதி விபத்து - 3 பேர் பலி
உத்தரபிரதேசம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் டேங்கர் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
புலந்த்ஷாஹர்,
உத்தரபிரதேசம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா பகுதியில் இந்துஸ்தான் செராமிக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பொருட்களை டெலிவரி செய்வதற்காக புலந்த்ஷாஹரில் இருந்து ஜீப் சென்று கொண்டிருந்தது. இதில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் 10-க்கும் மேற்பட்டோர் பயணித்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், புலந்த்ஷாஹர்-அலிகார் நெடுஞ்சாலையில் ஜீப் வந்து கொண்டிருந்த போது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஜீப்பில் சென்ற 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், ஜீப் டிரைவர் உள்ளிட்ட 8 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.