மும்பை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி வெளிநாட்டு பணத்துடன் துபாய் செல்ல இருந்த 3 பயணிகள் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி வெளிநாட்டு பணத்துடன் துபாய் செல்ல இருந்த 3 பயணிகள் கைது
x

வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அதை கடத்தி செல்ல இருந்த 3 பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் அதிகளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக (டி.ஆர்.ஐ.) பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து துபாய் செல்ல இருந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் 3 பயணிகளின் டிராலி பேக்கை வாங்கி சோதனை நடத்தினர். அப்போது அதில் அதிகளவில் வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 பயணிகளின் டிராலி பேக்கில் இருந்தும் 57 ஆயிரத்து 900 யூரோ, 4 லட்சத்து 42 ஆயிரத்து 300 திராம்களை பறிமுதல் செய்தனர். இதன் இந்திய பண மதிப்பு ரூ.1½ கோடி ஆகும்.

வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அதை கடத்தி செல்ல இருந்த 3 பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

Next Story