மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர்கள் செயலிழப்பு; பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் 3 நோயாளிகள் மூச்சுத்திணறி சாவு


மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர்கள் செயலிழப்பு; பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் 3 நோயாளிகள் மூச்சுத்திணறி சாவு
x

மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர்கள் செயலிழந்ததால் பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் 3 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்

பல்லாரி:

கர்நாடக மாநிலம் பல்லாரி டவுனில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி (விம்ஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென்று ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் வென்டிலேட்டர்கள் செயலிழந்தன. இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், வென்டிலேட்டர்கள் உதவியுடன் சிகிச்சை பெற்றவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் வென்டிலேட்டர்கள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதனால் நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள், மவுலான உசேன், சீத்தம்மா ஆகியோர் என்பதும், மற்றொருவர் முதியவர் என்பதும் தெரியவந்தது. மின்தடை செய்யப்பட்டதால் ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் செயலிழந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பல்லாரி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story