ராய்ச்சூர் அருகே, லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுவன் உள்பட 3 பேர் சாவு


ராய்ச்சூர் அருகே, லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுவன் உள்பட 3 பேர் சாவு
x

ராய்ச்சூர் அருகே, லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் மாவட்டம் சிரவாரா தாலுகா ஹொங்கரனி கிராமத்தில் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் சிறுவன் உள்பட 3 பேர் சென்று கொண்டு இருந்தனர். இந்த நிலையில் சாலையில் முன்னாள் சென்று கொண்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் சிரவாரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் சிரவாரா அருகே கல்லூரா கிராமத்தை சேர்ந்த பீமவ்வா மசாலி(வயது 50), அவரது உறவினர் பசவராஜ் மசாலி(40), நரேஷ்(8) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் உறவினர் ஒருவரின் இறுதிசடங்கில் கலந்து கொள்ள சென்றது தெரியவந்தது. விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார். விபத்து குறித்து சிரவாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story