சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது


சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
x

தீர்த்தஹள்ளி அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா ஹனகெரேகட்டே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சூதாட்டம் நடப்பதாக மாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள தோட்டத்தில் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசார் வருவதை கண்ட ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அவர்களிடம் இருந்து சூதாட வைத்திருந்த ரூ.83 ஆயிரத்தையும், ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களின் முழு விவரங்கள் குறித்து போலீசார் கூறவில்லை. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

1 More update

Next Story