30 ஆயிரம் இந்து கோவில் நிலங்கள் மீட்கப்படும்; ஸ்ரீராமசேனை அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் சவால்


30 ஆயிரம் இந்து கோவில் நிலங்கள் மீட்கப்படும்;  ஸ்ரீராமசேனை அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் சவால்
x

நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட 30 ஆயிரம் இந்து கோவில் நிலங்கள் மீட்கப்படும் என ஸ்ரீராமசேனை அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் சவால்விடுத்துள்ளாா்.

மைசூரு;

ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் மைசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மங்களூரு அருகே மலாலி மசூதியில் சிவன் கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் மற்றும் பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை பிரசன்னம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டில் பல இடங்களில் மசூதியில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்கள் மசூதியில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது என்று சவால் விடுகின்றனர். நாங்கள் மசூதியை கைப்பற்ற முற்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட இந்து கோவில்களை தான் மீட்க முயற்சிக்கிறோம். முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது.


நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான இந்து கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த நிலங்களை மீட்டு இந்து கோவில்கள் கட்டப்படும். இதனை சவாலாக தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story